அருள்வாக்குகள்
- இங்கே ஓங்கித் தட்டுக இல் buchananmercer6524
- ஆங்கில இலக்கணம் கற்க இல் mohamed
- 101 ஜென் கதைகள் இல் முனைவர்.இரா.குணசீலன்
- ஹிட்லர் ஜோக்ஸ் இல் விமல்
- பேசும் இறைச்சி இல் ஒளிர்ஞர்
க்ளிக்
பழையன
Flickr Photos
இங்கே ஓங்கித் தட்டுக
Posted in இணைப்பு
வெள்ளைத் துரோகம்
பிரிட்டனில் இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளைப் பற்றி உளவு அமைப்பான MI5க்குத் தகவல் தர பிஷர் அல்-ராவி ஒப்புக்கொண்டார். அதற்கு நன்றிக் கடனாக எம்.ஐ.5 அவரைத் தீவிரவாதி என்று சி.ஐ.ஏ.வுக்குக் காட்டிக்கொடுத்தது. அல்-ராவி நான்கு வருடங்கள் குவான்டானமோ பே சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டார்.
பச்சையில் நீலம்
நீல மரணத் திரையை (Blue Screen of Death) நினைவிருக்கிறதா? ஓர் அதிபுத்திசாலி அதைப் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார்.
Copy To, Move To…
கோப்புகளை நகலெடுத்து / பெயர்த்தெடுத்து ஃபோல்டர்களுக்குள் போடும் வசதி ரைட்க்ளிக்கில். ரெஜிஸ்ட்ரியில் இரண்டே இரண்டு மாற்றங்கள்…
Add Copy To / Move To to the Windows Explorer Right Click Menu
பேசும் இறைச்சி
“They use the radio waves to talk, but the signals don’t come from them. The signals come from machines.”
“So who made the machines? That’s who we want to contact.”
“They made the machines. That’s what I’m trying to tell you. Meat made the machines.”
அறிவியல் புனைவிற்கான மாபெரும் விருதுகளான நெபுலாவையும் ஹ்யூகோவையும் பெற்ற டெரி பிசன் (Terry Bisson) எழுதிய இந்தச் சிறுகதை மிகவும் பிரபலம். ஆனால் நான் அதைப் படித்தது சமீபத்தில்தான்.
மனிதர்களைப் பற்றி இரண்டு வேற்றுக் கிரகவாசிகள் இடையே நடக்கும் உரையாடலாக அமைந்திருக்கிறது They’re Made Out of Meat. மனித உடல் இறைச்சியால் ஆனது இவர்களுக்கு நம்ப முடியாத விஷயம். கதையின் லாஜிக்கை முதலில் ஒப்புக்கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் அதற்குப் பிறகு நிறைய யோசிக்க வைக்கிறது இந்தக் கதை.