பேசும் இறைச்சி

“They use the radio waves to talk, but the signals don’t come from them. The signals come from machines.”

“So who made the machines? That’s who we want to contact.”

“They made the machines. That’s what I’m trying to tell you. Meat made the machines.”

அறிவியல் புனைவிற்கான மாபெரும் விருதுகளான நெபுலாவையும் ஹ்யூகோவையும் பெற்ற டெரி பிசன் (Terry Bisson) எழுதிய இந்தச் சிறுகதை மிகவும் பிரபலம். ஆனால் நான் அதைப் படித்தது சமீபத்தில்தான்.

மனிதர்களைப் பற்றி இரண்டு வேற்றுக் கிரகவாசிகள் இடையே நடக்கும் உரையாடலாக அமைந்திருக்கிறது They’re Made Out of Meat. மனித உடல் இறைச்சியால் ஆனது இவர்களுக்கு நம்ப முடியாத விஷயம். கதையின் லாஜிக்கை முதலில் ஒப்புக்கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் அதற்குப் பிறகு நிறைய யோசிக்க வைக்கிறது இந்தக் கதை.

இள ரத்தம்

சியரா லியோனின் குழந்தைச் சிப்பாய் ஒருவனின் சுயசரிதைக்கு விரிவான பரிந்துரை ஒன்று எழுதியிருக்கிறார் மதி கந்தசாமி (லியனார்டோ டிகாப்ரியோ, ஜிமோன் ஹூன்சூ, ஜெனிஃபர் கானலி நடித்த Blood Diamond பார்த்திருக்கிறீர்களா?). A Long Way Gone படிக்க வேண்டிய புத்தகம்.

ஆங்கில இலக்கணம் கற்க

The Basics of English Grammar என்ற இந்த அரிய வழிகாட்டுக் கட்டுரை ஆங்கில இலக்கணத்தை விமர்சனப் பார்வையுடன் அணுகித் தீர்வுகளை முன்வைக்கிறது. உதா:

Other things to know about grammar are first person, second person and third person. I am writing this in the first person. You can tell that because I am using I. If I were writing it in the second person I would be saying things like, “You are writing in the first person.” Or something like that.

மைஸ்பேஸ், ஃபேஸ்புக் வர்க்க பேதம்

மைஸ்பேஸ் சேவையை வசதியில்லாத இளைஞர்களே அதிகம் பயன்படுத்துகிறார்கள்; ஃபேஸ்புக்கை வசதியானவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்கிறது இந்தக் கட்டுரை.

டேபிள் கம்ப்யூட்டர்

மைக்ரோசாஃப்ட்டின் ‘பரப்புக் கணினி’யைக் கிண்டல் செய்கிறார்கள்… நன்றி: TechCrunch