Monthly Archives: ஒக்ரோபர் 2006

புஷ்-இசம்

அமெரிக்காவின் இம்சை அரசன் அருளிய உளறல்களின் மேலான தொகுப்பு, வீடியோக்களுடன். ஓயாமல் அப்டேட் செய்ய வேண்டிய தேவை இருப்பதால் அங்ஙனமே செய்கிறார்கள்.

சாம்பிள்:

“That’s George Washington, the first president, of course. The interesting thing about him is that I read three—three or four books about him last year. Isn’t that interesting?”—Showing German newspaper reporter Kai Diekmann the Oval Office, Washington, D.C., May 5, 2006

பிகாசோ போல் படம் வரையலாம்

பிகாசோவின் கோட்டுச் சித்திரங்கள் அட்டகாசமானவை, பிரபலமானவை. இங்கே அவருடைய பாணியில் படம் வரையலாம். நீங்கள் வரைந்தது நம்மையே புல்லரிக்க வைத்தால் நண்பர்களுடன் மின்னஞ்சலில் பகிர்ந்துகொள்ளலாம்.

ஷேக்ஸ்பியரா செக்ஸ்பியரா?

தாஸ்தாயேவ்ஸ்கியா தஸ்தயெவ்ஸ்கியா? டால்ஸ்டாயா தல்ஸ்தோயா? எழுத்தாளர்களின் பெயர்களை உச்சரிக்க இங்கே உதவுகிறார்கள்.

பிரபலங்களின் (குறிப்பாக அரசியல்வாதிகளின்) பெயர்களை உச்சரிக்கும் முறை இங்கே.

முதல் இணைப்பில் அகராதிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அமெரிக்கர்களுக்கு முக்கால்வாசிப் பெயர்களை உச்சரிக்கத் தெரியாது என்பதால் U.S. என்று அடைப்புக் குறிகளுக்குள் வரும்போதெல்லாம் தப்பான உச்சரிப்பு என்று தெரிந்துகொள்ளலாம் (எ.கா.: டால்ஸ்டாய், நீட்ஷேக்கு பதிலாக நீச்சீ!).

இரண்டாவது இணைப்பு, அமெரிக்க அரசு சிறிய நாடுகளின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாழாக்கும்போது சைமல்டேனியஸாக உருவாக்கிய வலையகம்.

ஆள் பெயர்களும் இடப் பெயர்களும் உச்சரிக்கக் கற்றுத் தர இன்னொரு சைட் இருக்கிறது. ஆனால் அது ஒரு இலைதான் விட்டிருக்கிறது.

இவை துல்லியமான உச்சரிப்புகள் என்று சொல்ல முடியாது. ஆனால் கிட்டத்தட்ட சரியான தகவல் கிடைக்கிறது.

நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன்?

ஆத்திகவாதத்தைப் பற்றி மிக அடிப்படையான கேள்விகளைக் கேட்டிருக்கிறார் பகத் சிங். முழு கட்டுரை.

அண்ணாச்சிக்குக் கடிதம்

கவிஞர் ராஜமார்த்தண்டனின் ‘அப்படியே நிற்கட்டும் அந்த மரம்’ கவிதைத் தொகுப்புக்கு பகிரங்கக் கடித வடிவத்தில் மதிப்புரை எழுதியிருக்கிறார் திருநெல்வேலி கோயில் ராஜ் (எ) ஆர். முத்துக்குமார்.

IP முகவரியைக் கண்டுபிடிக்க

ஏதோ ஒரு தேவைக்காக உங்கள் ஐ.பி. முகவரியைக் கண்டுபிடிக்க சுலபமான ஷார்ட்கட்: WhatIsMyIP.

யார்ட்ட கத உடுறீங்க?

பால் குடிக்கும் பிள்ளையார், வாயிலிருந்து விபூதி வரவழைக்கும் சாமியார், நீர் மேல் நடக்கும் ஸ்வாமிஜி, ஃபோட்டோவில் மட்டும் காட்சியளிக்கும் ஆவிகள், ‘கம்ப்யூட்டர்’ ஜோசியம்…

இந்த மாதிரி அல்வாக்களை நம்புவோர் வருகை தர வேண்டிய சைட் The Skeptic’s Dictionary.

உதாரணத்துக்கு நாஸ்ட்ரடமஸ் பற்றிய ஒரு கமென்ட்:

His prophecies have a magical quality for those who study them: They are muddled and obscure before the predicted event, but become crystal clear after the event has occurred.