Category Archives: கணினி

IP முகவரியைக் கண்டுபிடிக்க

ஏதோ ஒரு தேவைக்காக உங்கள் ஐ.பி. முகவரியைக் கண்டுபிடிக்க சுலபமான ஷார்ட்கட்: WhatIsMyIP.

வலைக் கண்காட்சி

டாப்லோ, ஜிப்பிங்கோ, ஸ்கோபீ, டூஸ்டாங், ஜாமெண்டோ… ஒலியழகை வைத்துப் பார்த்தாலே தெரியவில்லை, இவை வலை 2.0 சைட்கள் என்று?

கோ2வெப்20யில் பல “வெப் 2.0” சைட்களுக்கு அழகான காலரி அமைத்திருக்கிறார்கள். வெப் 2.0  பலூன் வெடிக்கும் வரை இவர்கள் நம்மை லேசில் விடப் போவதில்லை.

உலகிலேயே அழகான 3D பெண்கள்

கணினியில் 3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அழகான பெண் உருவங்களை உருவாக்குவதற்காகவே ஒரு பத்திரிகை! The most beautiful CG girls என்ற இந்தப் பத்திரிகையை இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம். சுமார் 15 எம்.பி. பி.டி.எஃப். ஃபைல். பிரமிப்பூட்டும் படங்கள்!

Telnet ஜீவிக்கிறது

இணையமானது ஃப்ளிக்கர், நெட்வைப்ஸ் வரை வந்துவிட்டாலும் டெல்நெட்டை miss பண்ணுபவர்கள் அநேகர்.

இப்போதும் பலர் தங்கள் சர்வர்களை டெல்நெட் மூலம் இலவசமாகப் பயன்படுத்த அனுமதிக்கிறார்கள். அதில் ஒன்று Grex.

இங்கே பதிவு செய்துகொள்பவர்களுக்கு @cyberspace.org என்ற அட்டகாசமான மின்னஞ்சல் முகவரியும் கிடைக்கும் (உங்களுக்கு சகட்டுமேனிக்கு ஈ-மெயில் வந்து குவியும் என்றால் ஜிமெயிலோடு நிற்க).

வலையகத்தில் பதிவு செய்துகொண்ட பிறகுதான் கிரெக்ஸில் டெல்நெட் செய்ய முடியும்.

கிரெக்ஸ் ஒரு தனி உலகம். இதில் பல தலைப்புகளில் புல்லட்டின் போர்டுகள் இருக்கின்றன. மின்னஞ்சல் அனுப்ப/பெற, வலையுலாவ, குறிப்புகள் எழுத PINE, Lynx, pico, vi, emacs, joe எல்லாம் உண்டு. சாதா மெனு பிடிக்கவில்லை என்றால் csh, BASH, ksh முதலான யுனிக்ஸ் ஷெல்கள் இருக்கின்றன. பக்கா விண்டோஸ் பயனர்கள் கூட உள்ளே நுழைந்து உதவிக் குறிப்புகளைப் படித்துக் கற்றுக்கொள்ளலாம்.

கிரெக்ஸ் மூலமோ தனியாகவோ விசிட் அடிக்கப் பல டெல்நெட் முகவரிகளை telnet.org-இல் பார்க்கலாம்.

டெல்நெட் செய்ய விண்டோஸ் டெல்நெட்டைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று தலையெழுத்தில்லை. அதற்கு PuTTY என்று ஒரு சின்ன மென்பொருள் இருக்கிறது. சில டெல்நெட் சர்வர்களில் ssl லாகின் மூலம்தான் நுழைய முடியும். அதற்குத்தான் புட்டி. இதை இன்ஸ்டால் எல்லாம் செய்யத் தேவையில்லை.

இன்னொரு இடத்தையும் டெல்நெட்டில் பயன்படுத்தலாம்: telnet://freeshell.org. இங்கும் இலவச ஈ-மெயில் உண்டு (Mutt) – அதே கட்டுப்பாட்டு விதிகளுடன். ஒரு ஸ்க்ரீன்ஷாட் –

free telnet access

தெரியாத 20 விஷயங்கள்

விண்டோஸ் எக்ஸ்.பி.யில். சிலது மட்டும் கொஞ்சம் டெக்னிகல், சிலது ஈஸி. உதா.:

விண்டோஸ் கீயை அழுத்திக்கொண்டு Break (நம்பர் பலகைக்கு மேல் இருக்கிறது) அழுத்தினால் சிஸ்டம் ப்ராப்பர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.