மொபைலில் வீடியோ

Kyte.tv பற்றிக் கேள்விப்பட்டதில்லை. நோக்கியா இதில் முதலீடு செய்திருக்கிறது என்று எங்கோ படித்ததும் போய்ப் பார்த்தேன். Kyte என்ற அதன் பக்காவான மொபைல் மென்பொருளை என் மொபைலில் நிறுவிக்கொண்டேன். என்னுடைய படு சுமாரான GPRS இணைப்பிலேயே பரவாயில்லாமல் தெரிந்தது வீடியோ. ஆனால் ஸ்டாம்ப் சைஸில்.

கைட் வலையகம் மற்ற வீடியோ பகிர்வு வலையகங்களை விட நன்றாக இருக்கிறது. இது ஒரு நல்ல தொடக்கம். நோக்கியாவின் பலத்தில் கைட் மொபைல் யூட்யூப் ஆகுமா என்று பார்க்க வேண்டும்.

நான் செய்த ஸ்லைட் ஷோ

Captchaவுக்குக் கல்தா?

ஸ்பாமர்களைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட Captcha தொழில்நுட்பத்திற்கு வயதாகிவிட்டது. அதைப் பயன்படுத்திவந்த eBay, மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய நிறுவனங்களெல்லாம் வேறு வழிமுறைகளை யோசிக்க ஆரம்பித்திருக்கின்றன. என்கிறது இந்த சிநெட் நியூஸ் கட்டுரை.

ஆண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால்…

புகழ்பெற்ற பெண்ணியவாதி குளோரியா ஸ்டீனம் எழுதிய இந்தக் கட்டுரை வெறும் நகைச்சுவை அல்ல.

“The truth is that, if men could menstruate, the power justifications would go on and on.”

எம்.எஸ். பெயின்ட்டில் மோனா லிசா

வரைவது எப்படி? வீடியோ.

எம்.எஸ். பெயின்ட்டில் நமக்குத் தெரியாத உத்திகள்.

தலைவரின் முகம்

நாஜிகளின் பிடியில் டொனால்டு டக் மாட்டிக்கொண்டு படும் பாட்டை இந்த வால்ட் டிஸ்னி அனிமேஷன் படத்தில் கண்டு களிக்கலாம்.

1943இல் நாஜிகளுக்கு எதிரான பிரச்சாரப் படம் இது. ஆஸ்கர் விருது கூட வாங்கியிருக்கிறது. எட்டு நிமிட வீடியோ. நல்ல டைம் பாஸ்.

Der Fuehrer’s Face