Category Archives: வலைப்பதிதல்

மொபைலில் வீடியோ

Kyte.tv பற்றிக் கேள்விப்பட்டதில்லை. நோக்கியா இதில் முதலீடு செய்திருக்கிறது என்று எங்கோ படித்ததும் போய்ப் பார்த்தேன். Kyte என்ற அதன் பக்காவான மொபைல் மென்பொருளை என் மொபைலில் நிறுவிக்கொண்டேன். என்னுடைய படு சுமாரான GPRS இணைப்பிலேயே பரவாயில்லாமல் தெரிந்தது வீடியோ. ஆனால் ஸ்டாம்ப் சைஸில்.

கைட் வலையகம் மற்ற வீடியோ பகிர்வு வலையகங்களை விட நன்றாக இருக்கிறது. இது ஒரு நல்ல தொடக்கம். நோக்கியாவின் பலத்தில் கைட் மொபைல் யூட்யூப் ஆகுமா என்று பார்க்க வேண்டும்.

நான் செய்த ஸ்லைட் ஷோ

ரகசியம் சொல்லும் கலை

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களில் 4 கோடியே 53 லட்சத்து 68 ஆயிரம் ஹிட்ஸ் கிடைக்கும் அளவிற்குப் பிரபலம் இந்த வலைப்பதிவு.

PostSecret ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான பேரின் பங்களிப்பில் நடத்தப்படும் வலைப்பதிவு.

அத்தனை பேரும் தாங்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத ரகசியங்களை ஒரு போஸ்ட்கார்டில் அனுப்புகிறார்கள்.

PostSecretஇந்த போஸ்ட்கார்டுகள் பெரும்பாலும் அவர்களே தங்கள் கைவண்ணத்தில் தயாரித்தவையாக இருக்கும். ரகசியத்திற்கு சமமான முக்கியத்துவத்தை கற்பனைக்கும் தரச் சொல்கிறார்கள் என்பதால் பதிவுகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. இவற்றை கொலாஜ் வகையறாவில் சேர்க்கலாம்.

ரகசியங்கள் “நான் என் தோழியின் காதலனுடன் படுத்தேன்” என்பதிலிருந்து “நீ பரீட்சையில் தோற்றுப் போனதற்கு நான் சந்தோஷப்பட்டேன்” என்பது வரை பல வகை.

Kubrick தீமுக்கு இலவச ஹெடர் படங்கள்

வேர்ட்பிரஸ்காரர்கள் Kubrick தீமுக்கு ஹெடர் படத்தை மாத்திக்குங்கடா என்று சொல்லிவிட்டார்கள்.

குப்ரிக் தீமைப் போட்டிருப்பவர்களுக்காக ஹெடர் படங்களை இலவசமாகத் தருகிறார் ஒருவர். இவர் ஒரு திறமை மிகு டிஜிட்டல் கலைஞர். நம்மூர்க்காரர்.

ஹெடர்கள் இருக்கும் இடம்.

வலைப்பதிவுத் திருட்டைக் கையாள…

வலைப்பதிவு மற்றும் வேர்ட்பிரஸ் நிபுணர் லோரெல் விளக்குகிறார்.

நாம் பின்பற்ற முடியாத மேற்கத்தியமான அறிவுரை எதையும் அவர் தரவில்லை. உதாரணமாக, க்ரியேட்டிவ் காமன்ஸ் வலையகம் தரும் பதிப்புரிமை அறிவிப்பு ஒன்றை உங்கள் வலைப்பதிவில் போடுங்கள் என்கிறார்.

பர்சனல்: என்னுடைய இன்னொரு வலைப்பதிவான மைய நீரோட்டத்திற்கு நான் தேர்ந்தெடுத்த அறிவிப்பு பெரும்பாலான வலைப்பதிவுகளுக்குப் பொருந்தலாம். இதைத் தேர்ந்தெடுக்க நான் நிரப்பிய படிவம் இது.

வலைப்பதிவு தொழில் ரகசியங்கள்

  • உங்கள் வலைப்பதிவை எப்படிப் பிரபலமாக்குவது?
  • உருப்படியான பதிவுகளை எழுதுவது எப்படி?
  • அதை வைத்து எப்படி எக்ஸ்ட்ரா பணம் சம்பாதிப்பது?
  • எப்படி பாட்காஸ்டிங் செய்வது?

கற்றுக்கொள்ளுங்கள்.