Category Archives: அரசியல்

வெள்ளைத் துரோகம்

பிரிட்டனில் இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளைப் பற்றி உளவு அமைப்பான MI5க்குத் தகவல் தர பிஷர் அல்-ராவி ஒப்புக்கொண்டார். அதற்கு நன்றிக் கடனாக எம்.ஐ.5 அவரைத் தீவிரவாதி என்று சி.ஐ.ஏ.வுக்குக் காட்டிக்கொடுத்தது. அல்-ராவி நான்கு வருடங்கள் குவான்டானமோ பே சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டார்.

பயங்கரமான கதை.

இள ரத்தம்

சியரா லியோனின் குழந்தைச் சிப்பாய் ஒருவனின் சுயசரிதைக்கு விரிவான பரிந்துரை ஒன்று எழுதியிருக்கிறார் மதி கந்தசாமி (லியனார்டோ டிகாப்ரியோ, ஜிமோன் ஹூன்சூ, ஜெனிஃபர் கானலி நடித்த Blood Diamond பார்த்திருக்கிறீர்களா?). A Long Way Gone படிக்க வேண்டிய புத்தகம்.

ஆண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால்…

புகழ்பெற்ற பெண்ணியவாதி குளோரியா ஸ்டீனம் எழுதிய இந்தக் கட்டுரை வெறும் நகைச்சுவை அல்ல.

“The truth is that, if men could menstruate, the power justifications would go on and on.”

தலைவரின் முகம்

நாஜிகளின் பிடியில் டொனால்டு டக் மாட்டிக்கொண்டு படும் பாட்டை இந்த வால்ட் டிஸ்னி அனிமேஷன் படத்தில் கண்டு களிக்கலாம்.

1943இல் நாஜிகளுக்கு எதிரான பிரச்சாரப் படம் இது. ஆஸ்கர் விருது கூட வாங்கியிருக்கிறது. எட்டு நிமிட வீடியோ. நல்ல டைம் பாஸ்.

Der Fuehrer’s Face

ஹாலிவுட்டில் தொழிலாளர்கள்

ஹாலிவுட்டிலிருந்து மிக அபூர்வமான படங்கள் எல்லாம் வந்திருக்கின்றன. 70களில் இருந்த நார்மா ரே என்ற தொழிற்சங்கத் தலைவர் பற்றிய Norma Rae என்ற படத்தைப் பற்றிய இந்தக் கட்டுரையைப் பார்த்தால் ஹாலிவுட்டில் தொழிலாளர் பிரச்சினைகளுக்கும் இடமிருக்கிறதா என்று ஆச்சரியமாக இருக்கிறது.

கூடா உறவு

ஹிட்லரின் மனைவியான ஈவா பிராவ்ன், கணவருடன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவரைத் திருமணம் செய்துகொண்டார்.

ஹிட்லரின் வெறித்தனத்திற்கு அவரது ‘மாரல் சப்போர்ட்’ இருந்ததா?

‘The Lost Life of Eva Braun’ என்ற ஈவா பிராவ்னின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்திற்கு வாஷிங்டன் போஸ்ட்டின் மதிப்புரை.

ஜாதி விளையாட்டு

இது எஸ். ஆனந்த் என்பவர் எழுதிய பழைய கட்டுரை. ஆனால் இதில் இவர் அழுத்தமாகவும் அமர்க்களமாகவும் எடுத்துச் சொல்லும் விஷயங்கள் நீண்ட காலம் நிற்கும்.

அசுதோஷ் கோவாரிகர் இயக்கத்தில் ஆமீர் கான் நடித்த ‘லகான்’ படத்தின் விமர்சனம் போலவும் பொதுவாக கிரிக்கெட்டின் ஜாதி அரசியல் பற்றியும் எழுதப்பட்ட மிக நீண்ட கட்டுரை. ஆனந்த் அவுட்லுக் பத்திரிகையில் வேலை பார்க்கிறார்.

கட்டுரையில் ஆங்காங்கே பல சாட்டையடிகளைப் பார்க்கலாம். உதாரணமாக –

A ‘liberal-secular’ newspaper which has no qualms calling itself The Hindu…

Just brilliant!