லிங்க்கர் | Linkr

‘வலைப்பதிவு’ பகுப்பில் உள்ள வரவுகள்

அவல நிலையில் ஆட்டங்கள்

பெப்ரவரி 16, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்

மதுரையின் பாரம்பரியமிக்க ‘பர்ஸ் விளையாட்டு’ அழிந்துபட்ட கண்ணீர்க் கதையினைக் கேளீர்.

பகுப்புகள்: நகைச்சுவை · வலைப்பதிவு · விளையாட்டு

இரவுக் கழுகு has landed

பெப்ரவரி 6, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்

இரவுக் கழுகு, காமிக்ஸ் சாகச நாயகன் டெக்ஸ் வில்லரின் பட்டப் பெயர். லயன், முத்து காமிக்ஸ் புத்தகங்களில் தோன்றி ஆயிரக்கணக்கானோரின் இளமைப் பருவத்தை வளப்படுத்திய கௌபாய் டெக்ஸ் வில்லர்.

அப்பேர்ப்பட்டதோர் நாயகனின் பெயரைத் தாங்கி வந்திருக்கிறது ஒரு வலைப்பதிவு. காமிக்ஸ் படிப்பவர்களுக்கும் தெரியாத பல சுவையான தகவல்கள் இதில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பைக் கிளறிவிட்டிருக்கிறது இரவுக் கழுகு.

பகுப்புகள்: கலை · தகவல் · வரலாறு · வலைப்பதிவு

ரகசியம் சொல்லும் கலை

அக்டோபர் 1, 2006 · 1 மறுமொழி

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களில் 4 கோடியே 53 லட்சத்து 68 ஆயிரம் ஹிட்ஸ் கிடைக்கும் அளவிற்குப் பிரபலம் இந்த வலைப்பதிவு.

PostSecret ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான பேரின் பங்களிப்பில் நடத்தப்படும் வலைப்பதிவு.

அத்தனை பேரும் தாங்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத ரகசியங்களை ஒரு போஸ்ட்கார்டில் அனுப்புகிறார்கள்.

PostSecretஇந்த போஸ்ட்கார்டுகள் பெரும்பாலும் அவர்களே தங்கள் கைவண்ணத்தில் தயாரித்தவையாக இருக்கும். ரகசியத்திற்கு சமமான முக்கியத்துவத்தை கற்பனைக்கும் தரச் சொல்கிறார்கள் என்பதால் பதிவுகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. இவற்றை கொலாஜ் வகையறாவில் சேர்க்கலாம்.

ரகசியங்கள் “நான் என் தோழியின் காதலனுடன் படுத்தேன்” என்பதிலிருந்து “நீ பரீட்சையில் தோற்றுப் போனதற்கு நான் சந்தோஷப்பட்டேன்” என்பது வரை பல வகை.

பகுப்புகள்: இணைய கலாச்சாரம் · வலைப்பதிதல் · வலைப்பதிவு

வலைப்பதிவுத் திருட்டைக் கையாள…

செப்டம்பர் 28, 2006 · கருத்துத் தெரிவிக்கவும்

வலைப்பதிவு மற்றும் வேர்ட்பிரஸ் நிபுணர் லோரெல் விளக்குகிறார்.

நாம் பின்பற்ற முடியாத மேற்கத்தியமான அறிவுரை எதையும் அவர் தரவில்லை. உதாரணமாக, க்ரியேட்டிவ் காமன்ஸ் வலையகம் தரும் பதிப்புரிமை அறிவிப்பு ஒன்றை உங்கள் வலைப்பதிவில் போடுங்கள் என்கிறார்.

பர்சனல்: என்னுடைய இன்னொரு வலைப்பதிவான மைய நீரோட்டத்திற்கு நான் தேர்ந்தெடுத்த அறிவிப்பு பெரும்பாலான வலைப்பதிவுகளுக்குப் பொருந்தலாம். இதைத் தேர்ந்தெடுக்க நான் நிரப்பிய படிவம் இது.

பகுப்புகள்: வலைப்பதிதல் · வலைப்பதிவு

United 93 படத்தின் அரசியல்

செப்டம்பர் 20, 2006 · கருத்துத் தெரிவிக்கவும்

ஐரோப்பியர் பால் கிரீன்கிராஸ் இயக்கிய யுனைட்டட் 93 படத்தில் (9/11 பயங்கரவாதத் தாக்குதல் பற்றியது) அமெரிக்க இனவாத அரசியல் புகுந்து விளையாடுகிறது என்கிறார் ஒரு வலைப்பதிவர். ஹாலிவுட் படங்களில் அரசியலுக்கா பஞ்சம்?

United 93: A slanderous movie!

பகுப்புகள்: சினிமா · வலைப்பதிவு