Kyte.tv பற்றிக் கேள்விப்பட்டதில்லை. நோக்கியா இதில் முதலீடு செய்திருக்கிறது என்று எங்கோ படித்ததும் போய்ப் பார்த்தேன். Kyte என்ற அதன் பக்காவான மொபைல் மென்பொருளை என் மொபைலில் நிறுவிக்கொண்டேன். என்னுடைய படு சுமாரான GPRS இணைப்பிலேயே பரவாயில்லாமல் தெரிந்தது வீடியோ. ஆனால் ஸ்டாம்ப் சைஸில்.
கைட் வலையகம் மற்ற வீடியோ பகிர்வு வலையகங்களை விட நன்றாக இருக்கிறது. இது ஒரு நல்ல தொடக்கம். நோக்கியாவின் பலத்தில் கைட் மொபைல் யூட்யூப் ஆகுமா என்று பார்க்க வேண்டும்.
நான் செய்த ஸ்லைட் ஷோ…
பகுப்புகள்: இணைய கலாச்சாரம் · இலவசம் · கணினி · செய்தி · சேவை · வடிவமைப்பு · வலைப்பதிதல்
செப்டம்பர் 25, 2006 · 1 மறுமொழி
ஆர்க்குட், மைஸ்பேஸ் போல இந்தியர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் சைட் minglebox. வயசுப் பசங்களுக்கு (பொண்ணுங்க included) மட்டும்.
டெம்ப்ளேட் இல்லாத வலைப்பதிவுகள், வலைப்பக்கங்கள், புகைப்பட ஆல்பங்கள், மின்குழுக்கள் போன்றவை இலவசம். டிசைனை மாற்றினால் இன்னும் கொஞ்சம் பேர் உள்ளே நுழைந்து பார்ப்பார்கள்.
பகுப்புகள்: இலவசம் · சேவை
இணையமானது ஃப்ளிக்கர், நெட்வைப்ஸ் வரை வந்துவிட்டாலும் டெல்நெட்டை miss பண்ணுபவர்கள் அநேகர்.
இப்போதும் பலர் தங்கள் சர்வர்களை டெல்நெட் மூலம் இலவசமாகப் பயன்படுத்த அனுமதிக்கிறார்கள். அதில் ஒன்று Grex.
இங்கே பதிவு செய்துகொள்பவர்களுக்கு @cyberspace.org என்ற அட்டகாசமான மின்னஞ்சல் முகவரியும் கிடைக்கும் (உங்களுக்கு சகட்டுமேனிக்கு ஈ-மெயில் வந்து குவியும் என்றால் ஜிமெயிலோடு நிற்க).
வலையகத்தில் பதிவு செய்துகொண்ட பிறகுதான் கிரெக்ஸில் டெல்நெட் செய்ய முடியும்.
கிரெக்ஸ் ஒரு தனி உலகம். இதில் பல தலைப்புகளில் புல்லட்டின் போர்டுகள் இருக்கின்றன. மின்னஞ்சல் அனுப்ப/பெற, வலையுலாவ, குறிப்புகள் எழுத PINE, Lynx, pico, vi, emacs, joe எல்லாம் உண்டு. சாதா மெனு பிடிக்கவில்லை என்றால் csh, BASH, ksh முதலான யுனிக்ஸ் ஷெல்கள் இருக்கின்றன. பக்கா விண்டோஸ் பயனர்கள் கூட உள்ளே நுழைந்து உதவிக் குறிப்புகளைப் படித்துக் கற்றுக்கொள்ளலாம்.
கிரெக்ஸ் மூலமோ தனியாகவோ விசிட் அடிக்கப் பல டெல்நெட் முகவரிகளை telnet.org-இல் பார்க்கலாம்.
டெல்நெட் செய்ய விண்டோஸ் டெல்நெட்டைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று தலையெழுத்தில்லை. அதற்கு PuTTY என்று ஒரு சின்ன மென்பொருள் இருக்கிறது. சில டெல்நெட் சர்வர்களில் ssl லாகின் மூலம்தான் நுழைய முடியும். அதற்குத்தான் புட்டி. இதை இன்ஸ்டால் எல்லாம் செய்யத் தேவையில்லை.
இன்னொரு இடத்தையும் டெல்நெட்டில் பயன்படுத்தலாம்: telnet://freeshell.org. இங்கும் இலவச ஈ-மெயில் உண்டு (Mutt) – அதே கட்டுப்பாட்டு விதிகளுடன். ஒரு ஸ்க்ரீன்ஷாட் -

பகுப்புகள்: இலவசம் · கணினி · சேவை