லிங்க்கர் | Linkr

‘செய்தி’ பகுப்பில் உள்ள வரவுகள்

வெள்ளைத் துரோகம்

ஜூலை 29, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்

பிரிட்டனில் இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளைப் பற்றி உளவு அமைப்பான MI5க்குத் தகவல் தர பிஷர் அல்-ராவி ஒப்புக்கொண்டார். அதற்கு நன்றிக் கடனாக எம்.ஐ.5 அவரைத் தீவிரவாதி என்று சி.ஐ.ஏ.வுக்குக் காட்டிக்கொடுத்தது. அல்-ராவி நான்கு வருடங்கள் குவான்டானமோ பே சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டார்.

பயங்கரமான கதை.

பகுப்புகள்: அரசியல் · செய்தி · தகவல் · வரலாறு

பச்சையில் நீலம்

ஜூலை 28, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்

நீல மரணத் திரையை (Blue Screen of Death) நினைவிருக்கிறதா? ஓர் அதிபுத்திசாலி அதைப் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார்.

பகுப்புகள்: அறிவியல் · செய்தி · நகைச்சுவை · வரலாறு

மைஸ்பேஸ், ஃபேஸ்புக் வர்க்க பேதம்

ஜூன் 27, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்

மைஸ்பேஸ் சேவையை வசதியில்லாத இளைஞர்களே அதிகம் பயன்படுத்துகிறார்கள்; ஃபேஸ்புக்கை வசதியானவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்கிறது இந்தக் கட்டுரை.

பகுப்புகள்: இணைய கலாச்சாரம் · செய்தி

மொபைலில் வீடியோ

ஜூன் 13, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்

Kyte.tv பற்றிக் கேள்விப்பட்டதில்லை. நோக்கியா இதில் முதலீடு செய்திருக்கிறது என்று எங்கோ படித்ததும் போய்ப் பார்த்தேன். Kyte என்ற அதன் பக்காவான மொபைல் மென்பொருளை என் மொபைலில் நிறுவிக்கொண்டேன். என்னுடைய படு சுமாரான GPRS இணைப்பிலேயே பரவாயில்லாமல் தெரிந்தது வீடியோ. ஆனால் ஸ்டாம்ப் சைஸில்.

கைட் வலையகம் மற்ற வீடியோ பகிர்வு வலையகங்களை விட நன்றாக இருக்கிறது. இது ஒரு நல்ல தொடக்கம். நோக்கியாவின் பலத்தில் கைட் மொபைல் யூட்யூப் ஆகுமா என்று பார்க்க வேண்டும்.

நான் செய்த ஸ்லைட் ஷோ

பகுப்புகள்: இணைய கலாச்சாரம் · இலவசம் · கணினி · செய்தி · சேவை · வடிவமைப்பு · வலைப்பதிதல்

புஷ்-இசம்

அக்டோபர் 28, 2006 · கருத்துத் தெரிவிக்கவும்

அமெரிக்காவின் இம்சை அரசன் அருளிய உளறல்களின் மேலான தொகுப்பு, வீடியோக்களுடன். ஓயாமல் அப்டேட் செய்ய வேண்டிய தேவை இருப்பதால் அங்ஙனமே செய்கிறார்கள்.

சாம்பிள்:

“That’s George Washington, the first president, of course. The interesting thing about him is that I read three—three or four books about him last year. Isn’t that interesting?”—Showing German newspaper reporter Kai Diekmann the Oval Office, Washington, D.C., May 5, 2006

பகுப்புகள்: செய்தி · நகைச்சுவை