லிங்க்கர் | Linkr

‘கலை’ பகுப்பில் உள்ள வரவுகள்

எம்.எஸ். பெயின்ட்டில் மோனா லிசா

ஏப்ரல் 8, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்

பகுப்புகள்: கலை · தகவல்

தலைவரின் முகம்

மார்ச் 6, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்

நாஜிகளின் பிடியில் டொனால்டு டக் மாட்டிக்கொண்டு படும் பாட்டை இந்த வால்ட் டிஸ்னி அனிமேஷன் படத்தில் கண்டு களிக்கலாம்.

1943இல் நாஜிகளுக்கு எதிரான பிரச்சாரப் படம் இது. ஆஸ்கர் விருது கூட வாங்கியிருக்கிறது. எட்டு நிமிட வீடியோ. நல்ல டைம் பாஸ்.

Der Fuehrer’s Face

பகுப்புகள்: அரசியல் · இலவசம் · கலை · சினிமா · நகைச்சுவை · வரலாறு

தடயவியல் மொழியியலாளர்

பெப்ரவரி 14, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்

இலக்கண, எழுத்துப் பிழைகளை வைத்துக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் காமிக்ஸ் துப்பறியும் நிபுணர் பேராசிரியர் ஸ்மித். இந்த இரண்டைத் தவிர வேறு எந்தக் குற்றமும் செய்யாதவர்களும் குற்றவாளிகள்தாம் என்கிறார் ஸ்மித்.

பகுப்புகள்: கலை · நகைச்சுவை · மொழி

இரவுக் கழுகு has landed

பெப்ரவரி 6, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்

இரவுக் கழுகு, காமிக்ஸ் சாகச நாயகன் டெக்ஸ் வில்லரின் பட்டப் பெயர். லயன், முத்து காமிக்ஸ் புத்தகங்களில் தோன்றி ஆயிரக்கணக்கானோரின் இளமைப் பருவத்தை வளப்படுத்திய கௌபாய் டெக்ஸ் வில்லர்.

அப்பேர்ப்பட்டதோர் நாயகனின் பெயரைத் தாங்கி வந்திருக்கிறது ஒரு வலைப்பதிவு. காமிக்ஸ் படிப்பவர்களுக்கும் தெரியாத பல சுவையான தகவல்கள் இதில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பைக் கிளறிவிட்டிருக்கிறது இரவுக் கழுகு.

பகுப்புகள்: கலை · தகவல் · வரலாறு · வலைப்பதிவு

பிகாசோ போல் படம் வரையலாம்

அக்டோபர் 27, 2006 · கருத்துத் தெரிவிக்கவும்

பிகாசோவின் கோட்டுச் சித்திரங்கள் அட்டகாசமானவை, பிரபலமானவை. இங்கே அவருடைய பாணியில் படம் வரையலாம். நீங்கள் வரைந்தது நம்மையே புல்லரிக்க வைத்தால் நண்பர்களுடன் மின்னஞ்சலில் பகிர்ந்துகொள்ளலாம்.

பகுப்புகள்: கலை