லிங்க்கர் | Linkr

‘இலக்கியம்’ பகுப்பில் உள்ள வரவுகள்

அறிவியல் கதை

பெப்ரவரி 22, 2007 · 1 மறுமொழி

நாஜி அழிப்பு முகாம்களில் வதைபட்ட அனுபவங்களை எழுதிய ப்ரீமோ லெவியின் அறிவியல் கதை ஒன்று ‘த நியூ யார்க்கர்’ பத்திரிகையில் வந்திருக்கிறது.

நடையும் நகைச்சுவையும் இடாலோ கால்வினோவையும் விவரணைகள் ஆர்மகெடன், டீப் இம்ப்பாக்ட் போன்ற ஹாலிவுட் படங்களையும் நினைவுபடுத்துகின்றன.

பகுப்புகள்: இலக்கியம்

101 ஜென் கதைகள்

பெப்ரவரி 15, 2007 · 3 மறுமொழிகள்

உண்மையான பாதை

நினாகாவா காலமாவதற்குச் சற்று முன்பு ஜென் ஆசிரியர் இக்கியு அவரைப் பார்க்க வந்தார். “உங்களை நான் அழைத்துப் போகவா?” என்று கேட்டார் இக்கியு.

“நான் இங்கு தனியாகத்தான் வந்தேன், தனியாகத்தான் போகிறேன். உங்களால் எனக்கு என்ன பயன்?” என்று கேட்டார் நினாகாவா.

அதற்கு இக்கியு இவ்வாறு பதிலளித்தார்: “நீங்கள் நிஜமாகவே வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பதாக நினைக்கிறீர்கள் என்றால் அது உங்கள் பிரமை. வருவதும் போவதும் இல்லாத பாதையை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்.”

இக்கியு இந்தச் சொற்களால் பாதையை மிகத் தெளிவாகக் காண்பிக்கவே, நினாகாவா புன்னகைத்து இறந்தார்.

- – -

பாக்கி நூறு இங்கே.

பகுப்புகள்: இலக்கியம் · தத்துவம் · நகைச்சுவை · வரலாறு

சி.ஐ.ஏ.வின் இலக்கிய ஆர்வம்

பெப்ரவரி 2, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்

சோவியத்தில் வாட்டி வதக்கப்பட்ட போரிஸ் பாஸ்டர்நாக், ருஷ்யப் புரட்சியைப் பின்னணியாக வைத்து எழுதிய நாவல் ‘டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago). ருஷ்ய இலக்கியத்தில் இந்த நாவல் ஒரு மைல்கல் என்கிறார்கள்.

‘டாக்டர் ஷிவாகோ’ ருஷ்ய மொழியில் வெளிவர சி.ஐ.ஏ. ரகசியமாக நிதி அளித்தது என்றும் பாஸ்டர்நாக் நோபல் பரிசு பெற சி.ஐ.ஏ. செய்த ஏற்பாடு அது என்றும் ஒருவர் புத்தகம் எழுதுகிறார்.

பாஸ்டர்நாக்கிற்கு 1958இல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பரிசைப் பெறுவதற்கு ருஷ்யாவை விட்டுச் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அரசு நிர்ப்பந்தத்தால் பாஸ்டர்நாக் பரிசை நிராகரித்தார். ஆனால் நோபல் பரிசு அமைப்பு அதை ஏற்கவில்லை.

‘வாஷிங்டன் போஸ்ட்’டில் நீண்ட கட்டுரை.

பகுப்புகள்: இலக்கியம் · தகவல் · வரலாறு

ஷேக்ஸ்பியரா செக்ஸ்பியரா?

அக்டோபர் 23, 2006 · 2 மறுமொழிகள்

தாஸ்தாயேவ்ஸ்கியா தஸ்தயெவ்ஸ்கியா? டால்ஸ்டாயா தல்ஸ்தோயா? எழுத்தாளர்களின் பெயர்களை உச்சரிக்க இங்கே உதவுகிறார்கள்.

பிரபலங்களின் (குறிப்பாக அரசியல்வாதிகளின்) பெயர்களை உச்சரிக்கும் முறை இங்கே.

முதல் இணைப்பில் அகராதிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அமெரிக்கர்களுக்கு முக்கால்வாசிப் பெயர்களை உச்சரிக்கத் தெரியாது என்பதால் U.S. என்று அடைப்புக் குறிகளுக்குள் வரும்போதெல்லாம் தப்பான உச்சரிப்பு என்று தெரிந்துகொள்ளலாம் (எ.கா.: டால்ஸ்டாய், நீட்ஷேக்கு பதிலாக நீச்சீ!).

இரண்டாவது இணைப்பு, அமெரிக்க அரசு சிறிய நாடுகளின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாழாக்கும்போது சைமல்டேனியஸாக உருவாக்கிய வலையகம்.

ஆள் பெயர்களும் இடப் பெயர்களும் உச்சரிக்கக் கற்றுத் தர இன்னொரு சைட் இருக்கிறது. ஆனால் அது ஒரு இலைதான் விட்டிருக்கிறது.

இவை துல்லியமான உச்சரிப்புகள் என்று சொல்ல முடியாது. ஆனால் கிட்டத்தட்ட சரியான தகவல் கிடைக்கிறது.

பகுப்புகள்: இலக்கியம் · தகவல்

அண்ணாச்சிக்குக் கடிதம்

அக்டோபர் 19, 2006 · கருத்துத் தெரிவிக்கவும்

கவிஞர் ராஜமார்த்தண்டனின் ‘அப்படியே நிற்கட்டும் அந்த மரம்’ கவிதைத் தொகுப்புக்கு பகிரங்கக் கடித வடிவத்தில் மதிப்புரை எழுதியிருக்கிறார் திருநெல்வேலி கோயில் ராஜ் (எ) ஆர். முத்துக்குமார்.

பகுப்புகள்: இலக்கியம் · கிண்டல்