பிரிட்டனில் இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளைப் பற்றி உளவு அமைப்பான MI5க்குத் தகவல் தர பிஷர் அல்-ராவி ஒப்புக்கொண்டார். அதற்கு நன்றிக் கடனாக எம்.ஐ.5 அவரைத் தீவிரவாதி என்று சி.ஐ.ஏ.வுக்குக் காட்டிக்கொடுத்தது. அல்-ராவி நான்கு வருடங்கள் குவான்டானமோ பே சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டார்.
‘அரசியல்’ பகுப்பில் உள்ள வரவுகள்
இள ரத்தம்
ஜூலை 4, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்
சியரா லியோனின் குழந்தைச் சிப்பாய் ஒருவனின் சுயசரிதைக்கு விரிவான பரிந்துரை ஒன்று எழுதியிருக்கிறார் மதி கந்தசாமி (லியனார்டோ டிகாப்ரியோ, ஜிமோன் ஹூன்சூ, ஜெனிஃபர் கானலி நடித்த Blood Diamond பார்த்திருக்கிறீர்களா?). A Long Way Gone படிக்க வேண்டிய புத்தகம்.
ஆண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால்…
ஏப்ரல் 19, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்
புகழ்பெற்ற பெண்ணியவாதி குளோரியா ஸ்டீனம் எழுதிய இந்தக் கட்டுரை வெறும் நகைச்சுவை அல்ல.
“The truth is that, if men could menstruate, the power justifications would go on and on.”
பகுப்புகள்: அரசியல் · கிண்டல் · தத்துவம் · நகைச்சுவை · வரலாறு
தலைவரின் முகம்
மார்ச் 6, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்
நாஜிகளின் பிடியில் டொனால்டு டக் மாட்டிக்கொண்டு படும் பாட்டை இந்த வால்ட் டிஸ்னி அனிமேஷன் படத்தில் கண்டு களிக்கலாம்.
1943இல் நாஜிகளுக்கு எதிரான பிரச்சாரப் படம் இது. ஆஸ்கர் விருது கூட வாங்கியிருக்கிறது. எட்டு நிமிட வீடியோ. நல்ல டைம் பாஸ்.
பகுப்புகள்: அரசியல் · இலவசம் · கலை · சினிமா · நகைச்சுவை · வரலாறு
ஹாலிவுட்டில் தொழிலாளர்கள்
பெப்ரவரி 28, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்
ஹாலிவுட்டிலிருந்து மிக அபூர்வமான படங்கள் எல்லாம் வந்திருக்கின்றன. 70களில் இருந்த நார்மா ரே என்ற தொழிற்சங்கத் தலைவர் பற்றிய Norma Rae என்ற படத்தைப் பற்றிய இந்தக் கட்டுரையைப் பார்த்தால் ஹாலிவுட்டில் தொழிலாளர் பிரச்சினைகளுக்கும் இடமிருக்கிறதா என்று ஆச்சரியமாக இருக்கிறது.
