லிங்க்கர் | Linkr

பெப்ரவரி 2007 லிருந்து வரும் பதிவுகள்

ஹாலிவுட்டில் தொழிலாளர்கள்

பெப்ரவரி 28, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்

ஹாலிவுட்டிலிருந்து மிக அபூர்வமான படங்கள் எல்லாம் வந்திருக்கின்றன. 70களில் இருந்த நார்மா ரே என்ற தொழிற்சங்கத் தலைவர் பற்றிய Norma Rae என்ற படத்தைப் பற்றிய இந்தக் கட்டுரையைப் பார்த்தால் ஹாலிவுட்டில் தொழிலாளர் பிரச்சினைகளுக்கும் இடமிருக்கிறதா என்று ஆச்சரியமாக இருக்கிறது.

பகுப்புகள்: அரசியல் · சினிமா · வரலாறு

கூடா உறவு

பெப்ரவரி 25, 2007 · 2 மறுமொழிகள்

ஹிட்லரின் மனைவியான ஈவா பிராவ்ன், கணவருடன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவரைத் திருமணம் செய்துகொண்டார்.

ஹிட்லரின் வெறித்தனத்திற்கு அவரது ‘மாரல் சப்போர்ட்’ இருந்ததா?

‘The Lost Life of Eva Braun’ என்ற ஈவா பிராவ்னின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்திற்கு வாஷிங்டன் போஸ்ட்டின் மதிப்புரை.

பகுப்புகள்: அரசியல் · தகவல் · வரலாறு

ஜாதி விளையாட்டு

பெப்ரவரி 23, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்

இது எஸ். ஆனந்த் என்பவர் எழுதிய பழைய கட்டுரை. ஆனால் இதில் இவர் அழுத்தமாகவும் அமர்க்களமாகவும் எடுத்துச் சொல்லும் விஷயங்கள் நீண்ட காலம் நிற்கும்.

அசுதோஷ் கோவாரிகர் இயக்கத்தில் ஆமீர் கான் நடித்த ‘லகான்’ படத்தின் விமர்சனம் போலவும் பொதுவாக கிரிக்கெட்டின் ஜாதி அரசியல் பற்றியும் எழுதப்பட்ட மிக நீண்ட கட்டுரை. ஆனந்த் அவுட்லுக் பத்திரிகையில் வேலை பார்க்கிறார்.

கட்டுரையில் ஆங்காங்கே பல சாட்டையடிகளைப் பார்க்கலாம். உதாரணமாக -

A ‘liberal-secular’ newspaper which has no qualms calling itself The Hindu…

Just brilliant!

பகுப்புகள்: அரசியல் · சினிமா · வரலாறு · விளையாட்டு

அறிவியல் கதை

பெப்ரவரி 22, 2007 · 1 மறுமொழி

நாஜி அழிப்பு முகாம்களில் வதைபட்ட அனுபவங்களை எழுதிய ப்ரீமோ லெவியின் அறிவியல் கதை ஒன்று ‘த நியூ யார்க்கர்’ பத்திரிகையில் வந்திருக்கிறது.

நடையும் நகைச்சுவையும் இடாலோ கால்வினோவையும் விவரணைகள் ஆர்மகெடன், டீப் இம்ப்பாக்ட் போன்ற ஹாலிவுட் படங்களையும் நினைவுபடுத்துகின்றன.

பகுப்புகள்: இலக்கியம்

அவல நிலையில் ஆட்டங்கள்

பெப்ரவரி 16, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்

மதுரையின் பாரம்பரியமிக்க ‘பர்ஸ் விளையாட்டு’ அழிந்துபட்ட கண்ணீர்க் கதையினைக் கேளீர்.

பகுப்புகள்: நகைச்சுவை · வலைப்பதிவு · விளையாட்டு