லிங்க்கர் | Linkr

ஜனவரி 2007 லிருந்து வரும் பதிவுகள்

வெள்ளைக்கார சினிமா

ஜனவரி 25, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்

ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இருக்கும் ‘த லாஸ்ட் கிங் ஆஃப் ஸ்காட்லண்ட்’, வெள்ளைக்காரர்களுக்காக வெள்ளைக்காரர்கள் எடுத்திருக்கும் கதை என்கிறார் ஒரு விமர்சகர் (படத்தை நான் பார்க்கவில்லை).

வெள்ளைக்காரர்கள் வெள்ளையரல்லாதவர்களிடம் இரக்கப்பட்டு அவர்களுக்காகப் போராடுவதாகக் காட்டும் படங்களைப் பட்டியலிடுகிறார் வனெசா வால்டர்ஸ் – To Kill a Mockingbird, A Time to Kill, Cry Freedom…

லாஸ்ட் கிங்கும் இந்த வகையில் ஒரு வெள்ளை மனிதநேயப் படம்தானே, அதை ஏன் யாருமே சுட்டிக்காட்டுவதில்லை என்று கேட்கிறார் வனெசா. பதில் தெரிந்து கேட்கப்படும் கேள்வி.

ஓட்டல் ருவாண்டா மாதிரி படங்களை எப்போதாவதுதான் பார்க்க முடிகிறது…

பகுப்புகள்: சினிமா · வரலாறு

அமெரிக்க நீதி

ஜனவரி 10, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்

சதாம் ஹுசேனின் தீய செயல்களைப் பட்டியலிட்ட அமெரிக்க அரசு, அவர் ஈரானைப் படையெடுத்ததை மட்டும் சொல்லாமல் தவிர்த்தது. ஏன்? அந்தப் படையெடுப்பிற்கு அமெரிக்காவும் மற்ற பெரிய நாடுகளும் உதவின என்கிறார் ஸ்லாவோய் ஜிஜெக்.

கூர்மையான கட்டுரை.

பகுப்புகள்: வரலாறு