இந்த ஃப்ளாஷ் விளையாட்டுகளில் மூளைக்கு அதிக வேலை இல்லை. ஆனால் க்ளிக் செய்வதில் டைமிங் வேண்டும். மிக அழகான கிராஃபிக்ஸ், புதுமையான கற்பனை, லோட் ஆகும் வேகம் என்று நிறைய ப்ளஸ் பாயின்ட்களை சொல்லலாம்.
சைட்டில் இரண்டு சாம்பிள்களை ட்ரை பண்ணிப் பாருங்கள்.
இந்த ஃப்ளாஷ் விளையாட்டுகளில் மூளைக்கு அதிக வேலை இல்லை. ஆனால் க்ளிக் செய்வதில் டைமிங் வேண்டும். மிக அழகான கிராஃபிக்ஸ், புதுமையான கற்பனை, லோட் ஆகும் வேகம் என்று நிறைய ப்ளஸ் பாயின்ட்களை சொல்லலாம்.
சைட்டில் இரண்டு சாம்பிள்களை ட்ரை பண்ணிப் பாருங்கள்.
பகுப்புகள்: வடிவமைப்பு · விளையாட்டு
பெண்ணைப் பொருளாகப் பார்ப்பது போர்னோ. பொருளைப் பெண்ணாகப் பார்ப்பது?
விடை.
ஆபீசில் உட்கார்ந்து (அல்லது நின்று) பார்க்காதீர்கள்.
மேலே தலைப் படம் (header) மாறிவிட்டதைப் பார்த்தீர்களா? இலவச ஸ்டாக் ஃபோட்டோ உபயம்தான்.
தேடிய இடம் everystockphoto. அது என்னை stock.xchng-இல் கொண்டு போய் விட்டது. இந்த ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் இலவசமாக உறுப்பினர் ஆகி எவ்வளவு படங்களை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
yotophoto கூட உண்டு. ஆனால் கொஞ்சம் ஸ்லோ.
பகுப்புகள்: இலவசம் · வடிவமைப்பு
வேர்ட்பிரஸ்காரர்கள் Kubrick தீமுக்கு ஹெடர் படத்தை மாத்திக்குங்கடா என்று சொல்லிவிட்டார்கள்.
குப்ரிக் தீமைப் போட்டிருப்பவர்களுக்காக ஹெடர் படங்களை இலவசமாகத் தருகிறார் ஒருவர். இவர் ஒரு திறமை மிகு டிஜிட்டல் கலைஞர். நம்மூர்க்காரர்.
பகுப்புகள்: இலவசம் · வடிவமைப்பு · வலைப்பதிதல்
வலைப்பதிவு மற்றும் வேர்ட்பிரஸ் நிபுணர் லோரெல் விளக்குகிறார்.
நாம் பின்பற்ற முடியாத மேற்கத்தியமான அறிவுரை எதையும் அவர் தரவில்லை. உதாரணமாக, க்ரியேட்டிவ் காமன்ஸ் வலையகம் தரும் பதிப்புரிமை அறிவிப்பு ஒன்றை உங்கள் வலைப்பதிவில் போடுங்கள் என்கிறார்.
பர்சனல்: என்னுடைய இன்னொரு வலைப்பதிவான மைய நீரோட்டத்திற்கு நான் தேர்ந்தெடுத்த அறிவிப்பு பெரும்பாலான வலைப்பதிவுகளுக்குப் பொருந்தலாம். இதைத் தேர்ந்தெடுக்க நான் நிரப்பிய படிவம் இது.
பகுப்புகள்: வலைப்பதிதல் · வலைப்பதிவு